20 அடி ஆழத்தில் ஆடையின்றி நடித்த ஆர்யா | பிளாஷ்பேக்: மாற்றங்கள் பல கடந்து, மகத்தான வெற்றியைப் பதிவு செய்த எம் ஜி ஆரின் “ரிக்ஷாக்காரன்” | போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி உருவாகியுள்ள 'முதற்கனல்' | சமந்தா படத்தின் முதல் சிங்கிள் ஏப்., 19ல் வெளியீடு | ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புராண படம் | 'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? அந்த 3 இயக்குனர்களும் பிஸியாமே? | ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் |

மலையாளத்தில் இளம் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் பள்ளிச்சட்டம்பி. கயாடு லோகர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை ஜன கன மன படத்தின் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். 60, 70 களின் காலகட்டத்தில் நடைபெறும் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது. நாளை ஏப்ரல் பத்தாம் தேதி இந்த படம் வெளியாகும் என ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு புரமோஷன் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. தற்போது இந்த படம் இன்னும் ஐந்து நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு அடுத்த வாரம் ஏப்ரல் 15ம் தேதி சித்திரை விஷு கொண்டாட்டமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஏப்-9) கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் மறுநாளே மக்கள் ஆர்வமுடன் படம் பார்க்க வருவார்களா என்கிற சந்தேகம் ஒரு பக்கமும் கடந்த வாரம் வெளியான வாழ 2 திரைப்படம் வெற்றிகரமாக 100 கோடி வசூல் இலக்கை தொடும் விதமாக வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பது இன்னொரு பக்கமும் இருப்பதாலும் மேலும், வரும் ஏப்ரல் 15 தேதி முதல் நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதாலும் இப்போது இந்த ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளனர் என்றே சொல்லப்படுகிறது..




