பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? | சூரியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் கொட்டாச்சி | சினிமாவில் நடிக்க மறுக்கும் ரவி மோகன்: எந்தெந்த படங்களுக்கு பாதிப்பு? | சில பல படங்களின் காப்பியா 'கருப்பு'? |

பாலிவுட்டில் கடந்த 2012ம் வருடம் வெளியாகி ஹிட்டான படம் காக்டெயில். சைப் அலிகான், தீபிகா படுகோனே நடித்திருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது காக்டெயில் 2 என்கிற பெயரில் தயாராகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ஹோமி அடஜானியா தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் இருந்த நட்சத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, கிர்த்தி சனோன் ஆகியோர் நடிக்க, கதாநாயகனாக ஷாகித் கபூர் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் கிர்த்தி சனோன் ஆகியோருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது கதாபாத்திரம் கொஞ்ச நேரமே இடம்பெறும் விதமாக இருப்பதாகவும் ஷாகித் கபூர் அப்செட்டில் இருக்கிறார் என்று ஒரு செய்தி வெளியானது.
ரசிகர்கள் இதை சாதாரணமாக கடந்து போய் இருப்பார்கள். ஆனால் பிரபல நடிகை பிபாஷா பாசு இந்த செய்தியை தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரிப்போர்ட் செய்து உள்ளார். இவர் இந்தப்படத்தில் நடிக்கவில்லை என்பதாலேயே அவரால் பகிரப்பட்ட இந்த செய்தி நெட்டிசன்களிடம் கவனம் பெற்று வைரலாக பரவியது. இது குறித்து படக்குழுவினர் தரப்பிலிருந்து விரைவில் ஏதேனும் விளக்கம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.