விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'ஜெயிலர் 2'. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மலையாள நடிகர் மோகன்லால் அவர் காட்சிகளை நடித்து முடித்தார். கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். அதுபோல ஹிந்தி நடிகர் ஷாரூக்கானும் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது.
ஆனால், தற்போது ஷாரூக் நடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். அவர் தற்போது நடித்து வரும் 'கிங்' ஹிந்திப் படத்திற்காக உள்ள தோற்றத்துடன் வேறு படங்களில் நடிப்பதை விரும்பவில்லையாம். அதனால், இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டபோது அதை தவிர்த்து விட்டார் என்கிறார்கள். மேலும் இது குறித்து அவர் நடிகர் ரஜினிகாந்த்திடம் பேசியதாகவும் ஒரு தகவல் உள்ளது.
'ஜெயிலர் 2' படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை இப்படியான தகவல்களும், செய்திகளும் வந்து போகும். தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகு இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.