தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் | பிரபுதேவா, வடிவேலுவின் ‛பேங் பேங்' படப்பிடிப்பு நிறைவு | ஜூலை 3ல் ரிலீசாகிறது 'கட்டா குஸ்தி 2' | 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் | ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் |

கன்னடத்தில் நடிகர் துருவ் சார்ஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கேடி ; தி டெவில்'. இயக்குனர் பிரேம் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து பாலிவுட் நடிகையான நோரா பதேகி 'சர்கே கனர்' என்கிற ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். கடந்த மார்ச் மாதம் இந்த பாடலின் ஹிந்தி வெர்ஷன் வெளியானது.
ஆனால் இந்த பாடல் வரிகள் மிகவும் ஆபாசமாக இருப்பதாக கூறி மிகப்பெரிய அளவில் புகார்கள் எழுந்தது. இதை தொடர்ந்து இந்தப் பாடலில் நடித்து தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார்கள் எனக் கூறி தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து இதை கையில் எடுத்து சஞ்சய் தத் மற்றும் நோரா பதேகி ஆகியோருக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. ஆனால் நடிகை நோரா பதேகி சார்பில் அவரது வழக்கறிஞர் மட்டுமே ஏப்.,6ல் ஆஜராகி இது குறித்து விளக்கம் அளித்தார்.
ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத தேசிய மகளிர் ஆணையம், நோரா பதேகிக்கு வரும் ஏப்.,27 மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜராக கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதுமட்டுமல்ல நடிகை சஞ்சய் தத்தும் வரும் ஏப்ரல் எட்டாம் தேதி மகளிர் ஆணையம் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.