Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்டிஆர், நீல் பட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…

08 ஏப், 2026 - 10:43 IST
எழுத்தின் அளவு:
NTR,-Neil-film-rumours-put-to-rest...
Advertisement

'கேஜிஎப், சலார்' படங்களை அடுத்து பிரசாந்த் நீல் இயக்கி வரும் படத்தில் ஜுனியர் என்டிஆர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்தன.

அவற்றை மறுத்து படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் எக்ஸ் தளத்தில், “படத்தின் தோற்றம் குறித்தோ அல்லது படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது குறித்தோ பரவி வரும் வதந்திகளில் துளியளவும் உண்மையில்லை. வழக்கமான தயாரிப்பு இடைவேளையைத் தவிர படம் திட்டமிட்டபடியே தொடர்ந்து நடந்து வருகிறது. சரிபார்க்கப்படாத தகவல்களை யாரும் நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதிகாரப்பூர்வமான தகவல்கள் எப்போதும் எங்களிடமிருந்தே வெளியாகும்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.

பிரசாந்த் நீல் கடைசியாக இயக்கிய 'சலார்' படத்தின் முதல் பாகம் 2023ல் வெளிவந்தது. கேஜிஎப் சாயலில் வந்த அந்தப் படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக சொல்லப்பட்டது. அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்காமல் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்க வந்துவிட்டார்.

ஆகஸ்ட் 2024ல் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மெதுவாக நடைபெற்று வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சொந்த ஊரில் திருமண வரவேற்பு நடத்திய ராஷ்மிகா மந்தனாசொந்த ஊரில் திருமண வரவேற்பு நடத்திய ... பிரதீப் ரங்கநாதன் போல மாறுங்கள் ; தில்ராஜுவின் ஆலோசனைக்கு சிரஞ்சீவி பட இயக்குனர் பதில் பிரதீப் ரங்கநாதன் போல மாறுங்கள் ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap