மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

தெலுங்குத் திரையுலகத்தின் இளம் காதல் ஜோடிகளாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா பிப்ரவரி மாதம் 26ம் தேதி உதய்ப்பூரில் திருமணம் செய்து கொண்டனர். தெலுங்கு மற்றும் கொடவா முறைப்படி அவர்களது திருமணம் நடைபெற்றது. அதன்பின் மார்ச் 4ம் தேதி ஐதராபாத்தில் திரையுலக நண்பர்களுக்காக திருமண வரவேற்பு நிகழ்வை நடத்தினர்.
கர்நாடக மாநிலம் கூர்க் நகரைச் சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. பெங்களூருவில் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு மாடலிங்கில் நுழைந்தார். அங்கிருந்து கன்னட சினிமாவில் அறிமுகமாகி பின் தெலுங்கில் நடிக்கப் போய் அங்கும் பிரபலமானார். தன்னுடன் இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
தனது சொந்த ஊரின் மீது அபிமானம் உள்ள ராஷ்மிகா அவர்களது உறவினர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் இரு தினங்களுக்கு முன்பு கூர்க்கில் திருமண வரவேற்பு நிகழ்வை நடத்தியுள்ளார். அதில் ராஷ்மிகா பாரம்பரிய 'கொடவா' முறைப்படி புடவை அணிந்து கலந்து கொண்டார். எங்கு சென்றாலும் தனது கலாச்சாரத்தையும் முறையையும் கைவிடாமல் இருக்கிறார் ராஷ்மிகா.