விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

1987ம் ஆண்டு வெளிவந்து ஹாலிவுட்டை கலக்கிய படம் 'பெடல் அட்ராக்ஷன்' (ஆபத்தான ஈர்ப்பு). சிறிய பட்ஜெட்டில் தயாரான இந்த படம் கோடி கணக்கான டாலர்களை அள்ளியது. இந்த படத்தை தமிழில் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமார் 'அன்று பெய்த மழையில்' என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
கர்ப்பிணியான ஒரு பெண் விபத்தில் தன் கணவனை இழந்து கர்ப்பம் கலைந்து நிற்கதியாகிறாள். இதனால் பாதிக்கப்படும் அந்த பெண் நல்லதொரு குடும்ப வாழ்க்கை வாழும் ஒருவர் மீது வெறித்தனமான காதல் கொண்டு அவன் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். இதற்காக அவள் எதையும் செய்யத் தயாராகிறாள். சந்தர்ப்ப சூழ்நிலையில் ஒரு மழைநாளில் அந்த பெண்ணிடம் நெருக்கமாக இருந்து விட்டு பின்பு அவளின் ஆபத்தை உணர்ந்து எப்படி அவளிடமிருந்து அந்த குடும்ப தலைவன் தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை.
வெறித்தனமான காதல் கொள்ளும் பெண்ணாக சில்க் ஸ்மிதா நடித்தார். குடும்பத் தலைவனாக சரத்பாபு நடித்தார், அவரது மனைவியாக சரண்யா நடித்தார். சில்க் ஸ்மிதாவின் அழகு, கவர்ச்சி, வில்லங்கமான கதை இவைகள் படத்தை வெற்றி பெற வைத்தது. சில்க் ஸ்மிதா கதை நாயகியாக நடித்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.




