பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' |

மலையாளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் வெற்றியை பெற்றது. இதை ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். இதற்கு முன்னதாக அவர் ரோமாஞ்சம் என்கிற வெற்றி படத்தையும் கொடுத்திருந்தார். ஆவேசம் படத்தை தொடர்ந்து தற்போது சூர்யாவின் 47வது படத்தை இயக்கி வருகிறார் ஜித்து மாதவன். இதில் நஸ்ரியா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜித்து மாதவனிடம் ரோமஞ்சம் மற்றும் ஆவேசம் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஷிபினா பாபின் பாக்கர் என்பவர் முதன் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் துவக்க விழா பூஜை சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. இந்த துவக்க விழா பூஜையில் சூர்யா, நஸ்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் கிளாப்பை சூர்யா அடித்து படத்தை துவங்கி வைத்தார். கொடுங்கொல்லூர் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.