தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் |

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஷேன் நிகம். 2023ல் மலையாளத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் படத்தின் வெற்றி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானாலும் கூட சில படங்களில் தயாரிப்பாளர்களுடன் இயக்குனர்களுடன் ஏற்பட்ட சர்ச்சை காரணமாகவும் இவர் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ‛மெட்ராஸ்காரன்' என்கிற படத்தில் நடித்துள்ள இவர் தற்போது மலையாளத்தில் த்ரிதம் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஷேன் நிகம்.
மார்ட்டின் ஜோசப் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதை இயக்குனர் ஜீத்து ஜோசப் வெளியிடுகிறார். இதற்கு முன்னதாக கொரோனா பேப்பர்ஸ் மற்றும் வேல ஆகிய படங்களில் போலீஸ் கதாபாத்திரங்களை ஏற்று இவர் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ஷேன் நிகம். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது நிச்சயம் இந்த படம் அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் என்பது தெரிகிறது.