மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மலையாள நடிகர் மோகன்லால் ஐதராபாத் சென்றிருந்தார். தொடர்ந்து சில நாட்கள் அவருடைய காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது அவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். கூடவே ஹிந்தி நடிகரான ஷாரூக்கானும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இப்படத்தின் வெளியீடு குறித்து எந்த விதமான தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023ல் வெளிவந்த 'ஜெயிலர்' படத்தின் முதல் பாகம் 600 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. இந்த 2026ல் வெளியாக உள்ள படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஜெயிலர் 2' படம் ரஜினிகாந்த்தின் முந்தைய வசூல் சாதனையான '2.0' படத்தின் 800 கோடி வசூலை முறியடித்து தமிழ் சினிமாவில் முதல் 1000 கோடி வசூலைப் பெறுமா என்பதுதான் பலரது ஆசையாக உள்ளது.