Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

15 வயதில் என் போட்டோவை மார்பிங் செய்தனர் : ஜான்வி கபூர் வேதனை

06 ஏப், 2026 - 06:17 IST
எழுத்தின் அளவு:
Janhvi-Kapoors-anguish-My-photo-was-morphed-at-the-age-of-15
Advertisement

மறைந்த நடிகை ஸ்ரீ தேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் ராம் சரண் உடன் ‛பெத்தி' படத்தில் நடித்துள்ளார். ஏப்., 30ல் படம் திரைக்கு வருகிறது. ஜான்வி அளித்த பேட்டியில் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் எவ்வாறு தவறாக பயன்படுத்துகின்றனர் என்பதை வேதனையுடன் சொல்லியிருக்கிறார்.

அவர் கூறியதாவது, "நான் பள்ளி மாணவியாக இருந்த போது ஒரு முறை கம்ப்யூட்டர் வகுப்பிற்கு சென்றேன். அங்குள்ள மாணவர்கள் சிலர் ஆபாச இணையதளங்களை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் எனது புகைப்படம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.15 வயதிலேயே எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் மார்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. இது போன்ற விஷயங்களில் ஒழுக்கம் கிடையாது. இதை நாம் சகித்து தான் ஆக வேண்டும் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

தற்போது ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் எனது உருவத்தை ஆபாசமாக சித்தரிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் அணியாத ஆடைகளை அணிந்திருப்பது போலவும், நான் போஸ் கொடுக்காத விதத்திலும் புகைப்படங்களை உருவாக்கி பரப்புகின்றனர். இதுபோன்ற படங்கள், வீடியோக்கள் மக்களிடையே என்னைப் பற்றி தவறான எண்ணத்தை உருவாக்குகிறது.

ஒரு இயக்குனர் என்னிடம் ஒரு ஆடையை அணியச் சொல்லும் போது, எனக்கு விருப்பமில்லை என்று சொன்னால் உடனே இந்த போலி புகைப்படங்களை காட்டி நீங்கள் ஏற்கனவே இது போன்ற ஆடைகளை அணிந்து நடித்துள்ளீர்களே என்று கேட்கும் சூழல் உருவாகிறது. சமீபத்தில் கூட புகைப்பட கலைஞர்களிடம் நான் பேசும் போது, பெண்களின் உடல் உறுப்புகளை ஜூம் செய்து படம் பிடிப்பது அநாகரிகமானது என்று கூறினேன்.

பணம் மற்றும் வியூஸ்காக ஒரு பெண்ணின் உடலை அவரது சம்மதமின்றி காட்சிப்படுத்துவது தவறானது. தற்போது எனக்கு பெரிய அளவில் அதிகாரம் இல்லை என்பதால் என்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பயந்து அமைதியாக இருக்கிறேன். சரியான காலம் வரும்போது இதுகுறித்து நிச்சயம் குரல் கொடுப்பேன்" என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சுந்தர்.சிக்கு ஆதரவாக விஷால்... எதிராக வடிவேலு?சுந்தர்.சிக்கு ஆதரவாக விஷால்... ... 'டிஎன் 2026' பட வெளியீட்டிற்கு எதிராக வழக்கு 'டிஎன் 2026' பட வெளியீட்டிற்கு எதிராக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap