பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? | சூரியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் கொட்டாச்சி | சினிமாவில் நடிக்க மறுக்கும் ரவி மோகன்: எந்தெந்த படங்களுக்கு பாதிப்பு? | சில பல படங்களின் காப்பியா 'கருப்பு'? |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. கிர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காதலர்கள் தங்களது பார்ட்னர் சரியானவரா என்பதை ஆப் மூலம் நிர்ணயம் செய்வதும், அதனால் பாதிக்கப்படும் ஹீரோ அதன்பின் என்ன செய்கிறார் என்பது மாதிரியான கதையில் உருவாகி உள்ளது. வருகிற ஏப்ரல் 10ம் தேதியன்று திரைக்கு வருவதால் இதையொட்டி விக்னேஷ் சிவன் பேட்டி அளித்து வருகிறார்.
போடா போடி படம் விஜய்யின் துப்பாக்கி படத்துடன் போட்டியிட்டது குறித்து அவர் கூறியதாவது, " 'போடா போடி' திரைப்படத்தின் இயக்குனராக நான் ஒப்பந்தம் ஆன போது எனக்கு 22 வயது. ஆனால், அப்படம் வெளியாகும் போது எனக்கு 27 வயது ஆகிவிட்டது. அதுவரை ஏதாவது ஒரு தாமதம் நடந்து கொண்டே இருந்தது. இறுதியாக, நடிகர் விஜய்யின் 'துப்பாக்கி' படத்துடன் 'போடா போடி' வெளியானது. துப்பாக்கி படத்தின் இடைவேளையில் நடிகர் விஜய் 12 நபர்களைச் சுட்டுக் கொல்வார். உண்மையில் அவர் சுட்டது 13 பேர். அந்த 13வது ஆள் வேறு யாருமில்லை நான் தான்" என தெரிவித்துள்ளார்.
அதாவது ‛துப்பாக்கி' படத்துடன் தன் படம் வெளியாகி வரவேற்பு பெறாமல் போனதை தான் இப்படி கலகலப்பாக கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.