புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நிதிஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் ஹிந்தியில் உருவாகி வரும் சரித்திரத் திரைப்படம் 'ராமாயணா'. இப்படத்தின் முதல் பாகம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்பாக இப்படத்தின் 'ராமா' டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனிடையே, இப்படத்தின் ஓடிடி உரிமையை 700 கோடிக்குக் கேட்கிறார்கள் என்ற தகவல் தற்போது சுற்றி வருகிறது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் 1000 கோடி வரை எதிர்பார்க்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.
இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இதன் மொத்த பட்ஜெட் 4000 கோடி என்று ஏற்கெனவே தகவல் வெளியாக இருந்தது. அவ்வளவு பட்ஜெட் என்றால் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்ப்பதும் சரிதான் என்கிறார்கள்.
500, 600 கோடிகளில் தயாராகும் பான் இந்தியா படங்களின் ஓடிடி உரிமையை அதிகபட்சமாக 150 கோடி கொடுத்து வாங்கும் போது 4000 கோடி பட்ஜெட் படத்திற்கு 1000 கோடி கேட்பது சரிதானே என்றும் சிலர் சொல்கிறார்கள்.