'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

தமிழில் நேற்று காளிதாஸ் 2, லீடர், நீளிரா, கார்மேனி செல்வம், பைக்கர் உள்ளிட்ட 5 படங்கள் ரிலீஸ் ஆன நிலையில், அடுத்த வாரம் எல்ஐகே, மனிதன் தெய்வமாகலாம், டிஎன்2026, பள்ளிச்சட்டம்பி, அமைதிப்படை (ரீரிலீஸ்) உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. ஏப்ரல் 17, ஏப்ரல் 24 ஆகிய தேதிகளில் எந்தபடம் ரிலீஸ் ஆகிறது என்பதில் குழப்பம் நீடிக்கிறது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கும் நிலையில், தேர்தல் சமயத்தில் புதுப்படங்கள் தேவையா என பலர் யோசிக்கிறார்கள்.
இந்நிலையில் இன்வெஸ்டிகேஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் "ரூம் பாய் " ஏப்ரல் 17ம் தேதி ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளது. சி.நிகில், ஹர்ஷா நடிக்க, ஜெகன் ராயன் இயக்கி உள்ளார். படத்தின் தலைப்புக்கு ஏற்ப, ஹீரோ ரூம்பாய் ஆக வருகிறார். திருப்பத்தூர், ஏலகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அடுத்த சில நாட்களில் ஏப்ரல் 17, 24ல் ரிலீஸ் ஆக படங்களின் அறிவிப்பு வர வாய்ப்புள்ளது.