Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிஎன் 2026 படத்தில் விஜய்யை வம்பு இழுக்கிறார்களா? : தம்பி ராமையா, உமாபதி பதில்

04 ஏப், 2026 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Are-they-making-a-fuss-over-Vijay-in-the-movie-DN-2026-Thambi-Ramaiah,-Umapathy-reply
Advertisement

தம்பி ராமையா கதை, வசனத்தில், அவர் மகன் உமாபதி இயக்கத்தில் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் படம் டிஎன் 2026. இந்த படத்தில் ஒரு நடிகர் அரசியலுக்கு வருவதாக கதை நகர்கிறதாம். நடிகராக நட்டி நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான டீசரில் நட்டி கெட் அப், தவெக தலைவர் விஜய்யை கிண்டல் செய்வது போன்று அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

தேர்தல் நேரத்தில் தவெக, விஜய்யை விமர்சிக்க, அவரின் புகழை கெடுக்கவே இந்த படம் வெளியிடப்படுகிறது. திட்டமிட்டே இப்படிப்பட்ட கதையை உருவாக்கி, அதுவும் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தை வெளியிடுகிறார்கள். நாங்கள் படத்துக்கு எதிர்ப்பை காண்பிப்போம் என்று பொங்குகிறார்கள் தவெகவினர். சென்னை வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் ஆர்ஜூனாவும் இந்த படம் குறித்த தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் படம் குறித்து, சர்ச்சை குறித்து பேசிய தம்பிராமையா, 'என் மகன் வாழ்க்கையில் நான் விளையாட மாட்டேன். ஏப்ரல் 10ம் தேதி படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்து சொல்லலாம். நான் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்தேன். யாரையும் காயப்படுத்தமாட்டேன். ஓம் சக்தி பராசக்தி என்ற டயலாக் படத்தில் இடம் பெற்றுள்ளது. அடுத்து என்ன என எனக்கு தெரியாது. நான் சமூகவலைதளங்களில் இல்லை என்கிறார். இதற்கு ஒரு படி மேலேபோய் நான் விஜயுடன் நடித்து இருக்கிறேன். அவர் சிங்கம். அவரை சீண்ட முடியுமா? தவெகவினர் படம் பார்க்க வேண்டும். பின்னர், அவர்கள் சொல்வதை கேட்கிறேன். '' என்கிறார்.

இயக்குனர் உமாபதியோ கோட் படத்தில் விஜய் வரும் காரின் நம்பர் இந்த பட தலைப்பு என்கிறார்கள். அரசியல் கதை என்பதால் இந்த தலைப்பு. ஒரு நடுத்தர வயது நடிகர் அரசியலுக்கு வருகிறார். அதை மையமாக வைத்து நட்டிக்கு ஒரு கெட் அப் இருக்கிறது. அது விஜய் மாதிரி இருக்கிறது என்கிறார்கள். இந்த கெட் அப் தவிர இன்னும் சில கெட் அப் இருக்கிறது. நாங்கள் அரசியல் சார்ந்து படம் எடுக்கவில்லை. எந்த கட்சிக்கு ஆதரவாகவும் நாங்கள் இயங்கவில்லை. ஒரு அரசியல் சார்ந்த பொழுதுபோக்கு படம் எடுத்து இருக்கிறோம். '' என்கிறார்.

விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு இன்னமும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. தேர்தல் கமிஷன் அனுமதி தேவை என்கிறார்கள். இந்த படத்துக்கு மட்டும் எப்படி சென்சார் கிடைத்தது. இந்த படக்குழு பின்னால் அரசியல் இருக்கிறது. விஜய்யின் அரசியல் வாழ்க்கையை தடுக்கவே இந்த முயற்சி என்கிறார்கள் தவெகவினர். ஏப்ரல்10ம் தேதி படம் ரிலீசானபின் இந்த சர்ச்சைக்கு விடை கிடைக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'கரிகாலன்' படம் மீண்டும் உருவாக வாய்ப்புள்ளதா?'கரிகாலன்' படம் மீண்டும் உருவாக ... அதிக சம்பளமா..., பாடல் இல்லாதது ஏன் : லீடர் பட இயக்குனர் விளக்கம் அதிக சம்பளமா..., பாடல் இல்லாதது ஏன் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap