புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நடிகை பூஜா ஹெக்டே ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உள்ள முக்கிய நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் விஜய்யுடன் இணைந்து 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் ரிலீஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4' படத்திலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் பூஜா ஹெக்டே அளித்த பேட்டியில் கூறியதாவது, "சினிமாவில் வெற்றி, தோல்வி என்பது சமம் தான். நானும் அப்படித்தான் படங்களின் வெற்றி, தோல்விகளை கடந்துதான் பயணித்து வருகிறேன். எதுவாக இருந்தாலும் என் மனநிலையை கவலைப்படுத்தாது. வழக்கம்போல் படங்களில் பிஸியாக நடிக்கிறேன். மற்றபடி எந்த யூகங்களுக்கும் பதில் கூற விரும்பவில்லை" என்கிறார்.




