அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் பெரும்பாலும் ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். இந்த நிலையில் முதன்முறையாக மராத்தியில் வீரசிவாஜியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவாகியுள்ள 'ராஜா சிவாஜி' என்கிற படத்தில் நடித்திருக்கிறார் அபிஷேக் பச்சன். இதில் சாம்ராஜ் சாகாஜி போஸ்ட்லே என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபிஷேக் பச்சன்.
இந்த படத்தை நடிகை ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக் இயக்கியுள்ளார். அது மட்டுமல்ல சத்ரபதி சிவாஜி மகாராஜா கதாபாத்திரத்திலும் அவரே நடித்துள்ளார். வித்யா பாலன் கதாநாயகியாக நடிக்க ஜெனிலியாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர அப்சல் கான் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். வரும் மே 1ம் தேதி இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.