புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பெத்தி'. இந்த படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். முதலில் மார்ச் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஏப்ரல் 30ம் தேதி இந்த படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமான மறு அறிவிப்பு வெளியானது. இப்போது வரை இந்த அறிவிப்பில் மாற்றம் இல்லை. அதே சமயம் தெலுங்கு திரையுஉலகில் பெத்தி படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகலாம் என்றும் சிலர் ஜூன் மாதம் தான் இந்த படம் வெளியாகும் என்றும் சில தகவல்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தனர்.
அப்படி தவறான தகவலை சொன்னதற்காக 'சென்னை லவ் ஸ்டோரி' என்கிற படத்தில் தயாரிப்பாளர் கூட சமீபத்தில் வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் அந்த படக்குழுவினர் ராம்சரணை நேரில் சந்தித்து இந்த படத்திற்காக வாழ்த்து பெற்றுள்ளனர். இதுகுறித்து ராம்சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், “நீங்கள் உங்கள் படத்தின் ரிலீஸ் பணிகளை கவனியுங்கள். பெத்தி படத்தின் ரிலீஸ் தேதி எந்த விதத்திலும் தாமதமாகாது” என்று கூறியுள்ளார். இதன்மூலம் இதுவரை பெத்தி ரிலீஸ் தேதி குறித்து வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ராம்சரண்.




