Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காந்தாரா, ஹனுமன் அளவுக்கு ராமாயணா படத்துக்கு வரவேற்பு இருக்குமா?

02 ஏப், 2026 - 01:47 IST
எழுத்தின் அளவு:
Will-the-film-Ramayana-be-as-well-received-as-Gandhara-and-Hanuman
Advertisement

இந்தியளவில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்மிக படங்கள், தெய்வ நம்பிக்கையை சொல்லும் கதைகள், புராண படங்கள், நாட்டுப்பற்று பேசும் படங்கள் அதிகம் வருகின்றன. அந்த படங்களில் சில படங்கள் தமிழகத்திலும் ஹிட்டாகி உள்ளன. குறிப்பாக, காந்தாரா இரண்டு பாகங்களும் தமிழகத்தில் வெற்றி. அதேபோல், ஹனுமன், மகாஅவதார் நரசிம்மா படங்களும் பேசப்பட்டன. இங்கு வசூலை பெற்றன.

இந்த தீபாவளிக்கு ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடித்த ராமாயணா படம் இந்தியா முழுக்க வருகிறது. இதில் கேஜிஎப் யஷ் ராவணனாகவும், ரவிதுபே லட்சுமணராகவும், சன்னி தியோல் ஆஞ்சநேயராகவும் வருகிறார்கள். நமித் மல்கோல்த்ரா தயாரிக்க, நிதேஷ்திவாரி இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானும், ஹன்ஸ்சிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

தற்போது இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ராமர் தொடர்புடைய காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. முதற்பாகம் இந்த தீபாவளிக்கும், அடுத்தபாகம் அடுத்த தீபாவளிக்கும் வர இருக்கிறது.

எட்டுமுறை ஆஸ்கர் விருது வென்ற டிஎன்இஜி, மான்ஸ்டர் மைன்ட், பிரைம்போகஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. தமிழிலும் டப்பாகும் என தெரிகிறது. ராமாயணம் சம்பந்த்பட்ட கதைக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. ராமாயணா தமிழில் ஹிட்டாகுமா என்பது தீபாவளி காலத்தில் தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதி நடித்த முத்து என்கிற காட்டான் வெற்றியா?விஜய் சேதுபதி நடித்த முத்து என்கிற ... ஏப்ரல் 3 முதல் சதவீத முறைக்கு மாறும் தெலுங்கானா தியேட்டர்கள் ஏப்ரல் 3 முதல் சதவீத முறைக்கு மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap