Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : விலங்குகளை நம்பிய தேவர்

02 ஏப், 2026 - 10:48 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-God-Who-Believed-in-Animals
Advertisement

அடிப்படையில் குஸ்தி பயில்வானாக இருந்த சாண்டா சின்னப்பா தேவர் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் எம்ஜிஆரின் நண்பர் ஆனார். பின்னர் தயாரிப்பாளராகி எம்ஜிஆரை வைத்து 'தாய்க்கு பின் தாரம்' படத்தை தயாரித்தார். இந்த படம் பெரிய வெற்றி அடைந்து பெரிய லாபம் சம்பாதித்தார். அடுத்த படத்தையும் எம்ஜிஆரை வைத்து தயாரிக்க நினைத்தார். ஆனால் எம்ஜிஆர் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் 'பின்னர் பார்க்கலாம்' என்று கூறிவிட்டார்.

இதனால் வருத்தம் அடைந்த சின்னப்பா தேவர், அப்போது எம்ஜிஆருக்கு போட்டியாக கருதப்பட்ட ரஞ்சனை வைத்து 'நீலமலை திருடன்' படத்தை தயாரித்தார். அவரது 3வது படம் 'செங்கோட்டை சிங்கம்'. இது கிட்டத்தட்ட ஆங்கிலத்தில் வெளிவந்த 'டார்ஜான்' வகை கதை. ஏற்கெனவே ரஞ்சனை வைத்து படம் எடுத்ததால் கோபமாக இருந்த எம்ஜிஆர் 'என்னால் காட்டுவாசியாக நடிக்க முடியாது' என்ற மறுத்து விட்டார்.

வேறு சில காரணங்களால் ரஞ்சனும் நடிக்க மறுத்து விட கோபம் அடைந்த சின்னப்பா தேவர் 'நான் மனிதர்களை விட விலங்குகளை நம்புகிறேன். ஹீரோக்களை விட எனக்கு விலங்குகளே போதும்' என்று கூறி படத்தில் யானை, குதிரை, சிங்கம், புலி இவைகளை மையமாக வைத்துக் கொண்டு அப்போது கன்னடத்தில் முன்னணி நடிகராக இருந்த உதயகுமாரை இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார். விஎன் ரெட்டி இயக்கினார்.

இதில் உதயகுமாருடன் சரோஜாதேவி, பண்டரிபாய், டி.எஸ்.பாலையா, எஸ்.வி. சகஸ்ரநாமம், மைனாவதி, பி.எஸ். வீரப்பா, ஈ.ஆர். சகாதேவன், சின்னப்பா தேவர், 'குலதெய்வம்' ராஜகோபால், தனம், சி.பி. கிட்டான், வீரமோகன், 'பேபி' நித்யானந்தன் உள்ளிட்ட பலர் நடித்தார்கள். படம் வணிகரீதியாக வெற்றி பெறவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரு மாதம் தள்ளிப்போன பேட்ரியாட் ; புதிய ரிலீஸ் தேதி அறிவிப்புஒரு மாதம் தள்ளிப்போன பேட்ரியாட் ; ... பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரின் நிஜ ஹீரோ பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரின் நிஜ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap