Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழர்களின் திறனை ஊக்குவிக்கும் அமீரக குறும்பட விழா

02 ஏப், 2026 - 10:30 IST
எழுத்தின் அளவு:
Emirates-Short-Film-Festival-promotes-the-potential-of-Tamils
Advertisement

துபாயில் கடந்தவார இறுதியில், மூன்று பகுதிகளாக நடைபெற்ற குறும்பட போட்டியின் ஏழாம் வருட விழாவில், நடிகை வினோதினி நடுவராக, பங்கு கொண்டு சிறப்பித்தார். பெறப்பட்ட 35 க்கும் மேற்பட்ட கதைகளில் 12 நிமிடங்கள் கால அளவில், 12 நபர்கள் மட்டும் பங்கு பெறக்கூடிய கதைகளில் 12 தேர்ந்தெடுக்கப்பட்டு குறும்படங்களாய் உருவானது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை பயணமும், ஒரு குழுவினரின் முயற்சியாக சிறப்பு திரையீட்டிற்கு தயாரானது.

சனிக்கிழமை மார்ச் 28ம்தேதி மாலை துபாய் போர்ட் சயீத் பகுதியில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் சுவாரசியமான பல கேள்விகளுக்கு நகைச்சுவையுடனும் ஆர்வத்துடனும், நடிகை வினோதினி மனம் திறந்த அறிவுபூர்வமான தகவல்களை பகிர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

29ம் தேதி ஞாயிறன்று காலை, கோல்ட் சூக் பகுதியில் உள்ள ஸ்டார் கலேரியா திரையரங்கின் பெரும் திரையில், போட்டியிட்ட 13 குறும்படங்களை 350 க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன்நடிகை வினோதினி கண்டு களித்தார்.

அன்று மாலையே, போட்டியிட்ட படங்களை பரிசீலித்து, கரூத் பகுதியில் உள்ள அரங்கில் நடைபெற்ற வெற்றி விழாவில், கதை தேர்ந்தெடுப்பு முதல் அனைத்து குறும்படங்களைக் குறித்த தன் கருத்துக்களை பகிர்ந்து, 28 வெற்றியாளர்களை நடிகை வினோதினி அறிவித்து பங்கு கொண்டவர்களையும் பார்வையாளர்களையும் பலத்த கைத்தட்டல்களுக்கிடயே மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.



2026 அமீரக குறும்பட விழாவில் வெற்றியாளர்களின் விவரங்கள்:

* பெறப்பட்ட முதல் குறும்பட கதை வசனம்: அதிகார நிழல்/ ஷங்கர் மஹாதேவன்

* பெறப்பட்ட முதல் குறும்பட பதாகை: ஓர்மை / அர்விந்த் பாரதி

* திரை கடல் ஓடியும் - சுரேஷ் பாபு

* ஆல்ட்+கண்ட்ரோல்+லைஃப் - ஜசீலா பானு

சிறந்த உடை/ஒப்பனை
* கணேசா-கோபால்
* உப்பு- அர்ச்சனா ராஜேஷ்குமார் , சுப்ரஜா ராமகுமார்

சிறந்த அறிமுகம்
* நடிகர்: ப்ரசாத் குணசேகரன்/மீள் நிலை
* நடிகை : பூஜா பாலகிருஷ்ணன் / ம்யூட் லவ்
* கதை திரைக்கதை/வசனம் : கோகுல் வாசுதேவன், தார்வேஷ் முஸ்தஃபா/ மோஹக்
* இயக்குனர்: எஸ். கே. ஷங்கர்

சிறந்த ஒளிப்பதிவு
* குறும்படம்: அன்பு செய் - முர்ஷித் ரஹுமான்
* குறும்படம்: ம்யூட் லவ் - சந்தோஷ் நெல்சன்

சிறந்த கதை,திரைக்கதை வசனம்
* திரை கடல் ஓடியும்- சுரேஷ் பாபு
* ஆல்ட்+கண்ட்ரோல்+லைஃப் - ஜசீலா பானு

சிறந்த இசை
* பாரு பாட்ரிக் பவி - நெல்சன் பீட்டர்
* இரண்டாம் அத்தியாயம் - ஆண்டனி ஹுபர்ட்



சிறந்த குழந்தை நட்சத்திரம்
* ப்ரித்விக் செல்வகுமார் -அன்பு செய்
* மிருதுளா மன்னர் மன்னன் -இரண்டாம் அத்தியாயம்

சிறந்த குணச்சித்திர நடிப்பு
* ராமனாதான் - மோஹக்
* ஷங்கர் - கட்டம்

சிறந்த நடிகர்
* வீர வீரமணி - ஓர்மை, இரண்டாம் அத்தியாயம்
* அன்பன் கோவிந்தராஜன் - கணேசா

சிறந்த நடிகை
* ரேவதி கிருஷ்ணா - பாரு பாட்ரிக் பவி, கணேசா
* ஸ்ரீஜா விஜயன் - உப்பு, ஆல்ட் + கண்ட்ரோல்+ லைஃப்

சிறந்த இயக்குனர்
* ராவண் நவின்- க்ளாசா
* இம்ரான் பாஷா - ம்யூட் லவ்

சிறந்த குறும்படம் 2025
* க்ளாசா - ராவண் நவின்
* இரண்டாம் அத்தியாயம் - லலிதா ரமேஷன்

அமீரகத்தில் நிலவும் பதட்டமான வளைகுடாபோர் சூழலிலும், நில்லாது பெய்து சூழ்ந்த மழை நீரிலும், தளராது நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ய நன் கொடை அளித்த புரவலர்கள், உடனிருந்து உதவிய உறுதுணை குழு, ஆர்வத்துடன் பங்குபெற்ற குறும்பட குழுவினர், வருகை தந்து பாராட்டி மகிழ்ந்து கொண்டாடிய பார்வையாளர்கள் ரசிகர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றி கூறினர் ஏற்பாட்டாளர்கள் ஆனந்த் மற்றும் ரமா மலர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தந்தை, மகள் உறவை மையமாகக் கொண்ட கதையில் நாகார்ஜுனா 100வது படம்!தந்தை, மகள் உறவை மையமாகக் கொண்ட ... ஒரு மாதம் தள்ளிப்போன பேட்ரியாட் ; புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு ஒரு மாதம் தள்ளிப்போன பேட்ரியாட் ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap