'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

தமிழில் ரஜினி நடித்த ‛கூலி' படத்தில் வில்லனாக நடித்திருந்த தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, தற்போது தனது 100வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக இந்த படத்திற்கு கிங் 100 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரா.கார்த்திக் என்பவர் இயக்கும் இந்த படம் குறித்து நாகார்ஜுனா வெளியிட்டுள்ள செய்தியில், எனது 100வது படத்தின் படப்பிடிப்பு 45% முடிவடைந்துவிட்டது. இப்படத்திற்கான தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தந்தை மகள் உறவை மையமாகக் கொண்ட ஒரு கமர்சியல் கதையில் இந்த படம் உருவாகிறது. ஒரு கதையும் சென்டிமெண்ட் கதைக்குள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் 25 முதல் 60 வயது வரையிலான வெவ்வேறு வயது காலகட்டங்களில் தான் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார் நாகார்ஜுனா. அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நாகார்ஜுனாவுடன் தபு, சுஷ்மிதா பட் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.