'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

பாலிவுட் இயக்குனரும் நடிகர் அனுராக் காஷ்யப் தென்னிந்திய படங்கள் மீது மிகப்பெரிய ஆர்வம் கொண்டவர். அதனால் தமிழில் 'இமைக்கா நொடிகள், மகாராஜா' ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது தெலுங்கில் முதன்முறையாக 'டகாய்ட்' என்கிற படத்தில் நடித்துள்ளார். அதிவி சேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை நடித்து இருக்கிறார் அனுராக் காஷ்யப்.
தனது கதாபாத்திரம் எந்த அளவிற்கு சுவாரசியமாக இருக்கும் என்பது குறித்து அனுராக் காஷ்யப் கூறும்போது, “இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது, நீங்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறீர்கள் என்று சொன்னார்கள். ஆனால் வில்லன் அல்ல, அதேசமயம் இது ஹீரோவுக்கும் வில்லனுக்குமாக கதையும் அல்ல.. உண்மையை சொல்லப்போனால் இது ஒரு காதல் கதை என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன கதையும் அந்த கதாபாத்திரமும் எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது. இந்த படத்தில் ஒரு சைக்கோ போலவோ அல்லது மூர்க்கமானவராகவோ நடிக்கும்படி அவர்கள் என்னை கேட்கவில்லை. என்னுடைய வயதில் இருக்கும் ஒரு நபரை போலத்தான் நான் நடித்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.