Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

'பெத்தி' பட ரிலீஸ் தேதியை தவறுதலாக அறிவித்ததற்காக மன்னிப்பு கேட்ட இன்னொரு பட தயாரிப்பாளர்

01 ஏப், 2026 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Another-film-producer-apologizes-for-mistakenly-announcing-the-release-date-of-Peddi
Advertisement


தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பெத்தி'. கடந்த மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பவன் கல்யாண் நடித்த 'உஸ்தாத் பகத்சிங்' படம் வெளியாவதற்காக இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள். இந்த நிலையில் தற்போது ஏப்ரல் 30ம் தேதி கூட இந்த படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் திரையுலகில் எழுந்துள்ளது.

இது குறித்து பெத்தி படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான தகவலை தெரிவிக்காத நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்று பேசிய சென்னை லவ் ஸ்டோரி படத்தின் தயாரிப்பாளர் சீனிவாச குமார் என்பவர் அந்த விழா மேடையில் பேசும்போது பெத்தி திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி வெளியாகும் என்று கூறினார். இது ரசிகர்களை மட்டுமல்ல பெத்தி படக்குழுவினருக்கே மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில், தான் இப்படி தன்னிச்சையாக தேதியை அறிவித்தது குறித்து வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார் சீனிவாச குமார்..

இது குறித்து அவர் கூறும்போது, “அந்த நிகழ்ச்சியில் சென்னை லவ் ஸ்டோரி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்று கேட்டார்கள். அந்த சமயத்தில் எங்கள் படத்தின் எழுத்தாளரும் இணை தயாரிப்பாளருமான சாய் ராஜேஷ் பெத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறது என்று கூறியதால், அது உறுதியான தகவல் தான் என நினைத்து எங்கள் பட ரிலீஸ் தேதியை கூறுவதற்காக பெத்தி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக ஒரு தேதியை குறிப்பிட்டு பேசி விட்டேன்.

ஆனால் அது எவ்வளவு தவறு என்பது அதன்பிறகு தான் எனக்கு தெரிய வந்தது, இதற்காக நான் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பெத்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அந்த படம் எப்போது வந்தாலும் பிளாக்பஸ்டர் வெற்றி பெறும் என்பது உறுதி” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திரிஷ்யம் பாணியில் காமெடியாக உருவாகி இருக்கும் மோகினியாட்டம்திரிஷ்யம் பாணியில் காமெடியாக ... பாலியல் புகார் எதிரொலி ; தொழிலாளர் சம்மேளனத்தில் இருந்து இயக்குனர் ரஞ்சித் சஸ்பெண்ட் பாலியல் புகார் எதிரொலி ; தொழிலாளர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap