இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு |

ஹிந்தியில் கடந்த நவம்பர் மாதம் ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்-2' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 1300 கோடிக்கு மேல் வசூலித்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் அதன் இரண்டாம் பாகம் 'துரந்தர்-2' என்கிற பெயரில் வெளியானது. முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனால் கடந்த 10 நாட்களுக்குள்ளாகவே 1300 கோடி வசூலை எளிதாக கடந்துள்ளது.
இந்த நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் ஒரு சிலர் ரன்வீர் சிங்குக்கும் உதய்பிர் சந்து என்பவருக்கும் இடையே நடக்கும் சண்டைக் காட்சியில் கண்ணிமைக்கும் நொடியில் கடந்து போகும் ஒரு பிரேமில் படத்தின் கேமராமேனின் உருவம் நிழல் உருவமாக தெரிவதை கண்டுபிடித்து அதை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தி உள்ளனர். தற்போது பலரும் இதை பெரிதுபடுத்தி பேசுவதை கவனித்த இயக்குனர் ஆதித்யா தர் உடனடியாக அந்த குறிப்பிட்ட பிரேமை சரி செய்து புதிய காப்பிகளை திரையரங்குக்கு தற்போது அனுப்பி வைத்துள்ளார்.