புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களாக 'போதைப் பொருள் பயன்பாடு' குறித்து பல விஷயங்கள் நடந்து வருகிறது. சினிமா சம்பந்தப்பட்ட பார்ட்டிகளில் 'போதைப் பொருள்' பயன்படுத்தப்பட்டு வருகிறது என போதைப் பொருள் தடுப்புப் போலீசார் விசாரணை நடத்தினர். முக்கிய இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோரிடம் இது குறித்து விசாரணை நடைபெற்றது. சிலர் மீது கைது நடவடிக்கையும் இருந்தது.
இந்நிலையில் தெலுங்கானா மாநில எம்எல்ஏ அனிருத் ரெட்டி நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் இது குறித்து பேசினார்.
“சினிமா நடிகர்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அதனால், அவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிராக போராட வேண்டும். ஒவ்வொரு நடிகருக்கும் 90 நாட்களுக்கு ஒரு முறை போதைப் பொருள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே அவர்களது படங்களை வெளியிட வேண்டும். இல்லையென்றால் அவர்களது படங்களை வெளியிட அனுமதிக்கக் கூடாது,” என்று பேசினார்.
அவரது பேச்சும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதற்கு எதிர்ப்பும், ஆதரவும் என பல கமெண்ட்டுகள் வந்துள்ளது. இது குறித்து தெலுங்கு திரையுலகம் தரப்பில் இன்னும் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் கூட போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் சில நடிகர்கள் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.




