Advertisement

சிறப்புச்செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை பாலியல் புகார் : மலையாள இயக்குனர் ரஞ்சித் கைது

01 ஏப், 2026 - 10:47 IST
எழுத்தின் அளவு:
Actress-sexual-harassment-complaint-Malayalam-director-Ranjith-arrested
Advertisement

மலையாளத் திரையுலகத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளருமான ரஞ்சித் பாலகிருஷ்ணன் மீது ஒரு நடிகை கொடுத்த பாலியல் புகாரை அடுத்து நேற்று கைது செய்யப்பட்டார். அவரை எர்ணாகுளம் மத்திய போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ரஞ்சித் தற்போது இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வரும் நடிகை தான் அந்த பாலியல் புகாரை அளித்துள்ளார். மிகவும் ரகசியமான தீவிர விசாரணைக்குப் பிறகுதான் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஹேமா கமிட்டி அறிக்கையில் கூட ரஞ்சித் பெயர் அடிபட்டு சர்ச்சையை உருவாக்கி இருந்தது.

இதற்கு முன்பு பெங்காலி நடிகை ஒருவர் ரஞ்சித் மீது பாலியல் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2009ல் நடைபெற்றது என 2024ல் அவர் இ-மெயில் மூலம் கொச்சி போலீஸ் கமிஷனருக்கு புகார் அளித்திருந்தார். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவையும் கேரள உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கனவு நனவானது ; சூர்யாவை சந்தித்த மகிழ்ச்சியில் 'யூத்' பட நாயகிகனவு நனவானது ; சூர்யாவை சந்தித்த ... நடிகர்களுக்கு போதை பரிசோதனை செய்ய வேண்டும் : தெலுங்கானா எம்எல்ஏ பேச்சு நடிகர்களுக்கு போதை பரிசோதனை செய்ய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap