கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் பரத், ஷீத்தல் நடித்த ‛காளிதாஸ்' படம் 2019ம் ஆண்டு வெளியாகி ஓரளவு பேசப்பட்டது. பரத்தின் சினிமா வாழ்க்கையிலும் வெற்றியை கொடுத்தது. அடுத்து வந்த பல படங்கள் பரத்துக்கு பிரேக் கொடுக்கவில்லை. சில ஆண்டுகளாக வெற்றிக்காக பரத் காத்திருக்கிறார். இந்நிலையில், ஏப்ரல் 3ம் தேதி ஸ்ரீசெந்தில் இயக்கத்தில் பரத் நடித்த காளிதாஸ் 2 வருகிறது. இதில் பூவே உனக்காக சங்கீதா, அபர்ணதி, பவானிஸ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார் பரத். முதல்பாகம் மாதிரியே இந்த படத்துக்கும் வரவேற்பு கிடைக்கும், நீண்ட காலத்துக்குபின் வெற்றி கிடைக்கும் என அவரும் நம்பிக்கையுடன் இருக்கிறார். பாய்ஸ் படத்தில் ஷங்கரால் 5 இளைஞர்கள் அறிமுகப்பபடுத்தப்பட்டனர். அவர்களின் சித்தார்த் மட்டுமே ஓரளவு மார்க்கெட் இருக்கிறார். தமன் இசையமைப்பாளர் ஆகிவிட்டார். மணிகண்டன், நகுலுக்கு மார்க்கெட் இல்லை. பரத் நிலைமை இப்படி இருக்கிறது.