விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

கடந்த சில மாதங்களாக கார் ரேஸ் வேலைகளுக்காக துபாயில் அதிகம் இருந்த அஜித், இப்போது ஈரான் இஸ்ரேல் போர் சூழல் காரணமாக, சென்னையில் இருக்கிறார் அஜித். நேற்று மாமல்லபுரத்தில், மேற்குராஜ வீதி பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் மல்லிகேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் சோமவார பிரதோஷ நாளான நேற்று மாலை 6:20 மணிக்கு நடிகர் அஜித் சிலருடன் வந்தார்.
கோவில் அர்ச்சகர் சந்தோஷிடம், குடும்பத்தினரின் ராசி விபரங்களை தெரிவித்து, சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார். அவருடன் வந்த நபர், 11முக ருத்ராட்ச மாலையை, சுவாமியிடம் சமர்பித்து பின் அணிந்தார். இத்தாலியில் நடக்க உள்ள கார் பந்தயத்தில், அஜித் வெற்றிபெற வேண்டி வழிபட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மகனின் கால்பந்து போட்டியை ரசித்துள்ளார். இப்படியாக நேரத்தை கடத்தி வருகிறார். அடுத்த படம் எப்போது அறிவிக்கப்படும்? இந்த ஆண்டு உங்க படம் ரிலீஸ் ஆகுமா என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.
இது குறித்து விசாரித்தால் அஜித் கால்ஷீட் ப்ரியாக இருக்கிறது. ஸ்கிரிப்ட்டுடன் ஆதிக்ரவிச்சந்திரன் தயாராக இருக்கிறார். படத்தின் பணியாற்ற டெக்னீஷியன்களும் முடிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் வேண்டுமே? அவர் கிடைக்காததால் ஓட்டு மொத்த குழுவும் காத்திருக்கிறது. அஜித்தின் சம்பளம் 180 கோடியில் இருந்து குறைந்தால் மட்டுமே படப்பிடிப்பு தொடங்கும். இல்லாவிட்டால் ஓராண்டு வீணாது போல, இந்த ஆண்டும் வீணாக நேரிடும். அஜித் சம்பள பிடிவாதத்தை தளர்ந்த வேண்டும் என்கிறார்கள்.




