Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபாஸின் அம்மாவாக நடிக்கும் ஜெயப்பிரதா

31 மார், 2026 - 12:27 IST
எழுத்தின் அளவு:
Jayaprada-to-play-Prabhas-mother
Advertisement

சீதாராமம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஹனு ராகவபுடி, தற்போது பிரபாஸை வைத்து பவுசி என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி இஸ்மாயில் என்பவர் நடிக்கிறார். இவர்கள் தவிர முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜெயப்பிரதா பிரபாஸின் அம்மாவாக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 52 வருடங்களாக திரையுலகில் பயணித்து வரும் ஜெயப்பிரதா தொடர்ந்து அரசியலில் பயணித்து வருவதால் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அதேசமயம் நல்ல கதாபாத்திரங்கள் தேடி வரும்போது மட்டும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பவுசி படத்தில் பிரபாஸின் அம்மாவாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் அவருடன் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பவுசி படத்தில் நடிப்பது குறித்து ஜெயப்பிரதா கூறும்போது, “இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. படப்பிடிப்பு தளத்தில் அவரது அர்ப்பணிப்பு உணர்வையும் வேலை பார்க்கும் ஸ்டைலையும் பார்த்து பிரமித்தேன்” என்று கூறியுள்ளார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடந்த வருடம் ஜி-5ல் நேரடியாக வெளியான ரிவாஸ் என்கிற படத்தில் ஜெயப்பிரதாவும் மிதுன் சக்கரவர்த்தியும் இணைந்து நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'காஞ்சனா' தெலுங்கு ரீ ரிலீஸ் : அசத்தல் வசூல்'காஞ்சனா' தெலுங்கு ரீ ரிலீஸ் : ... மாமல்லபுரம் சிவன் கோயிலில் அஜித் வழிபாடு மாமல்லபுரம் சிவன் கோயிலில் அஜித் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
31 மார், 2026 - 03:03 Report Abuse
KayD ஒரு காலத்துல மிக அழகான திறமையான நடிகை.. நினைத்தாலே இனிக்கும்.. 47 நாட்கள் சலங்கை ஒலி இன்னும் கேட்டுட்டு தான் இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap