Advertisement

சிறப்புச்செய்திகள்

20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் | நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்! | 'கருப்பு' படம் மூன்று நாளில் ரூ.147 கோடி வசூல் | கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

உதவி செய்யுங்கள் : துரந்தர் படக்குழுவுக்கு பாகிஸ்தான் மக்கள் கோரிக்கை

30 மார், 2026 - 05:45 IST
எழுத்தின் அளவு:
Please-help-Pakistani-people-request-the-Durandhar-film-crew
Advertisement

கடந்த டிசம்பர் மாதம் ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியான துரந்தர் மற்றும் சமீபத்தில் வெளியான அதன் இரண்டாம் பாகமான துரந்தர் 2 என இரண்டு பாகங்களும் ரசிகர்களின் ஒட்டுமொத்த வரவேற்பையும் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றன. இந்திய உளவாளி ஒருவர் பாகிஸ்தானுக்கு சென்று அங்குள்ள மக்களோடு மக்களாக தன்னை பொருத்திக் கொண்டு இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக சிரமங்களை சந்திப்பது தான் படத்தின் கதை.

இதில் அந்த உளவாளி கதாபாத்திரத்தில் நடித்த ரன்வீர் சிங் தங்கியிருக்கும் நகரமாக பாகிஸ்தானின் மிக முக்கிய நகரமான கராச்சியில் உள்ள லயாரி இடம் பிடித்திருந்தது. சொல்லப்போனால் இந்த படத்தின் கதைக்களமே இந்த லயாரி நகரம் தான். இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாகமும் சமீபத்தில் வெளியாகி ஆயிரம் கோடி வசூலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள லயாரி நகரத்தை சேர்ந்த மக்கள் பலரும் சோசியல் மீடியா மூலமாக துரந்தர் படக்குழுவிற்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

அதாவது, எங்களுடைய லயாரி நகரத்தை மையப்படுத்தியே உங்களது கதைக்களம் இருந்தது, அதனால் படத்தின் லாபத்தில் எங்களது நகரத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பங்கு தர வேண்டும் என்று சிலரும், இன்னும் சிலர் உங்கள் படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கி எங்கள் நகரத்திற்கு தேவையான சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள். வெளிநாட்டு வங்கிகளில் கடன் வாங்குவதில் தான் பாகிஸ்தான் மும்முரமாக இருக்கிறதே தவிர, எங்களுக்கான எந்த வசதிகளையும் செய்ய தயாராக இல்லை என்றும் கோரிக்கையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

துரந்தர் படக்குழுவினர் இந்த விஷயத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்த ஹிந்தி படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய பூஜா ஹெக்டேஅடுத்த ஹிந்தி படத்திற்கான டப்பிங் ... இந்தியாவில் 1000 கோடி வசூலைக் கடந்த 'துரந்தர் 2' இந்தியாவில் 1000 கோடி வசூலைக் கடந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap