மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

ஒவ்வொரு வருடங்களிலும் பெரிய நடிகர்களின் படங்களை பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் தான் திரைக்கு கொண்டு வருவார்கள். அதேபோல் இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்களில் ஏற்கனவே சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' படம் திரைக்கு வருகிறது என அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அதே அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை வாரத்தை முன்னிட்டு 'அரசன்' படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும் என சிம்பு தரப்பில் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மறுபுறம் சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் உருவாகி வரும் 'புருஷன்' படத்தை மே மாதத்தில் படப்பிடிப்பை முடித்து, அக்டோபர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் இவ்வருட ஆயுத பூஜை, விஜயதசமி வாரத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன், சிம்பு, விஷால் என மும்முனை போட்டியை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.