Advertisement

சிறப்புச்செய்திகள்

திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மறு உத்தரவு வரும் வரை கேரளா ஸ்டோரி 2 ரிலீஸை நிறுத்திவைத்த கேரள உயர்நீதிமன்றம்

26 பிப், 2026 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Kerala-High-Court-stays-release-of-Kerala-Story-2-till-further-orders
Advertisement

கடந்த 2023ல் வெளியான தி கேரளா ஸ்டோரி என்கிற திரைப்படம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பாவி இந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வெளிநாட்டில் உள்ள ஐஎஸ்ஐ தீவிரவாத குழுவிற்கு அனுப்பி வைக்கும் கும்பலை பற்றிய கதையாக உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் சுதீப்தோ சென். இந்த படம் வெளியான சமயங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த படம் வெளியாக தடை விதிக்கப்பட்டது.. இருந்தாலும் படம் வெற்றியை பெற்றது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தி கேரளா ஸ்டோரி 2 என்கிற பெயரில் உருவாகி உள்ளது. காமாக்யா நாராயண் சிங் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இந்த படம் பிப்-27 (நாளை) வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று கூறி கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் படத்தை நாளை ரிலீஸ் செய்யக்கூடாது, மனுதாரரின் பெட்டிசன் மீது நீதிமன்றம் அடுத்த விசாரணை நடக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்ல சென்சார் போர்டுக்கும் நீதிமன்றம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. நீங்கள் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கூட கொடுத்திருக்கக் கூடாது.. ஆதனால் யு/ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறீர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த படம் நாளை வெளியாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தடை செய்யப்பட்ட துரந்தர் படம் பார்ப்பதற்காகவே இந்தியா வந்தார்கள் : ரசிகர்கள் மீது மாதவன் நம்பிக்கைதடை செய்யப்பட்ட துரந்தர் படம் ... 'கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் 'கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap