ஜனநாயகன் லீக் ; தவறான குற்றச்சாட்டு : தணிக்கை வாரியம் அறிக்கை | திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள் : ‛ஜனநாயகன்' லீக் பற்றி மமிதா பைஜூ அறிக்கை | ஜெயிலர் 2 படத்தில் பவன் கல்யாண்? | ‛தி பாரடைஸ்' படத்தில் சுப்பு வேடத்தில் கயாடு லோகர் | ஏப்ரல் 24ல் ‛சிவகாசி' உடன் ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | 75 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஓர் இரவு' | தமிழில் இதற்கு முன்பு 'லீக்' ஆன படங்கள் என்னென்ன தெரியுமா ? | 'துரந்தர்-2 'படத்திற்கு தடைவிதிக்க : நீதிமன்றம் மறுப்பு | அண்ணி மீது ஹன்சிகா வழக்கு | பிளாஷ்பேக் : அபூர்வ சகோதரர்கள் மனோரமாவிற்கு முன் காந்திமதி |

தெலுங்கு திரை உலகில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக முக்கியத்துவம் வாய்ந்த நடிகராக பயணித்து வருபவர் நடிகர் மோகன் பாபு. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மோகன் பாபு, தமிழில் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல ஒரு தயாரிப்பாளராகவும் நான்கு படங்களை தயாரித்துள்ளார். இவரது மகன் விஷ்ணு மஞ்சு தற்போது தெலுங்கு திரையுலகில் நடிகர் சங்க தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில் மோகன் பாபுவின் இந்த கலை பயணத்தை பாராட்டி கவுரவிக்கும் விதமாக மேற்கு வங்க அரசு சமீபத்தில் குடியரசு தினத்தன்று மேற்கு வங்க கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவின்போது மோகன் பாபுவுக்கு கவர்னரின் சிறப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது. கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மோகன் பாபுவுடன் அவரது மகன் விஷ்ணு மஞ்சுவும் கலந்து கொண்டார்.