ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் |
மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் மலையாள காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் சவுபின் சாஹிர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான மோனிகா பாடலில் இவர் ஆடிய நடனம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் கூலி படத்தில் பஹத் பாசில் நடிக்க முடியாமல் போன காரணத்தால் தான் சவுபின் சாஹிர் அதில் ஒப்பந்தமானார் என்கிற செய்தி வெளியானது. ஆச்சர்யமாக இதேபோல சவுபின் சாஹிர் நடிக்க முடியாமல் போன வேடத்தில் பஹத் பாசில் நடித்துள்ளார் என்கிற ஆச்சர்ய தகவலும் உண்டு.
இயக்குனர் திலீஷ் போத்தன் இயக்கத்தில் 2016ல் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம் படம் தான் சவுபின் சாஹிரை ஒரு நல்ல காமெடி நடிகராக அடையாளம் காட்டியது. அந்த படத்தை முடித்த கையோடு அடுத்த படமான தொண்டிமுதலும் திரிக் சாட்சியமும் என்கிற படத்தை இதே கூட்டணியில் துவங்கினார் திலீஷ் போத்தன். இதில் திருடனாக பஹத் பாசிலும், நகையை பறிகொடுத்த மனிதராக சுராஜ் வெஞ்சாரமூடுவும் நடித்திருந்தனர்.
ஆனால் இந்த கதையை உருவாக்கிய போது இதில் திருடனாக சவுபின் சாஹிரும், சுராஜ் நடித்த கதாபாத்திரத்தில் பஹத் பாசிலும் நடிப்பதாகத்தான் திட்டமிட்டு இருந்தனர். அந்த சமயத்தில் சவுபின், இயக்குனராக மாறி துல்கர் சல்மானை வைத்து பறவ படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக ஜெயிலர் வில்லன் நடிகர் விநாயகனை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார்கள்.
அந்த சமயத்தில் படக்குழுவினர் பலரும் திருடன் கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடிக்க வைக்கலாம் என்றும், இன்னொரு கதாபாத்திரத்தை விநாயகனுக்கு கொடுக்கலாம் என்றும் ஆலோசனை கூறினார்கள். ஆனாலும் விநாயகன் கால்ஷீட்டும் அப்போது கிடைக்கவில்லை. அதன் பிறகு தான் அந்த கதாபாத்திரத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு நடித்தார் அந்தவகையில் கூலி படத்தை போலவே மலையாள திரைப்படத்தில் இப்படி இவர்கள் இருவரிடையே ஒரு சுவாரசியமான விஷயம் நிகழ்ந்துள்ளது ஆச்சர்யமான விஷயம் தான்.