கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. நடிப்பு தாண்டி தயாரிப்பாளராகவும் உள்ள இவர் நடிகை சாயிஷாவை காதலித்து 2019ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். சினிமா தாண்டி ஆர்யா சில தொழில்களும் செய்து வருகிறார். குறிப்பாக சென்னையில் அண்ணாநகர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் 'ஸி ஷெல்' என்ற பெயரில் உணவகம் நடத்தினார்.
இந்நிலையில் இந்த உணவகங்களில் இன்று(ஜூன் 18) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. ஆர்யாவுக்கு சொந்தமான உணவு என்பதால் ஆர்யாவின் அண்ணா நகர் வீட்டிலும் ரெய்டு என தகவல் பரவ, மீடியாவினர் குவிந்தனர்.
இதுபற்றி ஆர்யாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், ‛‛சென்னையில் ஐடி ரெய்டு நடக்கும் ஓட்டலுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது வேறு ஒருவருக்கு சொந்தமானது'' என தெரிவித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த உணவகத்தை கேரளா மாநிலம் தலச்சேரியை சேர்ந்த மூசா என்பவரிடம் ஆர்யா குடும்பம் விற்றுவிட்டார்களாம். ஆர்யா குடும்ப உணவகம் என பெயர் இருந்ததால் ஆர்யா உணவகத்தில் ரெய்டு என செய்தி பரவி விட்டது.