விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் | நான்காவது வாரத்தை கடந்து நான்-ஸ்டாப் ஆக ஓடும் 'அமரன்' | புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1989ல் தெலுங்கில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை கிரிஜா. இந்தப் படம் தமிழில் 'இதயத்தை திருடாதே' என்கிற பெயரில் வெளியாகி இங்கேயும் வரவேற்பை பெற்றதுடன் நடிகர் நாகார்ஜுனாவுக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகத்தையும் பெற்று தந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த கிரிஜாவின் துருதுருப்பான, துணிச்சலான, துள்ளாத நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த காலகட்டத்தில் இந்த இளம் பெண் கதாபாத்திரம் ஆச்சரியமாகவும் பார்க்கப்பட்டது. அந்த படத்தில் வரவேற்பை பெற்ற கிரிஜா அதே வருடத்தில் மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'வந்தனம்' படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார். வந்தனம் படமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
அதை தொடர்ந்து ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்த்த நிலையில் அவர் நடித்த ஒன்று இரண்டு படங்கள் பாதியிலேயே நின்றுவிட்டன. இதனைத் தொடர்ந்து மீண்டும் படிப்பதற்காக இங்கிலாந்து திரும்பி விட்டார் கிரிஜா. இடையில் 2003ல் ஹிந்தியில் வெளியான 'சனம் மேரி கசம்' படத்தில் சில நொடிகள் வந்து போகும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 35 வருடங்கள் கழித்து மீண்டும் தென்னிந்திய சினிமாவிற்கு திரும்பியுள்ள நடிகை கிரிஜா கன்னடத்தில் உருவாகி வரும் 'இப்பணி தப்பிதா இலேயாளி' என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது அவரது உருவ தோற்றமும் நிறையவே மாறி இருந்தாலும் முன் போலவே ரசிகர்களின் இதயத்தை தனது நடிப்பால் திருடுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.