அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் ஆவேசம் என்கிற படம் வெளியானது. ரோமஞ்சம் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் ஜித்து மாதவன் இந்த படத்தை இயக்கியிருந்தார். ரங்கா என்கிற ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்திருந்தார். அதேசமயம் ஆக்ஷனுடன் காமெடிக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாகி இருந்தது. அதிலும் குறிப்பாக பஹத் பாசிலின் ரங்கா கதாபாத்திரத்தின் வலது கையாக அம்பான் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சஜின் கோபுவின் காமெடி கலந்த நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதுடன் அவரை வெளிச்சத்திற்கும் கொண்டு வந்தது.
இதற்கு முன்பு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த சஜின் கோபு ஆவேசம் படத்தின் மூலம் பிரபலமானதை தொடர்ந்து தற்போது புதிதாக உருவாக இருக்கும் படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஆவேசம் பட இயக்குனர் ஜித்து மாதவன் மற்றும் பஹத் பாசில் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். அது மட்டுமல்ல இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் ஸ்ரீஜித் பாபு கூட ஆவேசம் படத்தில் ஹாஸ்டல் வார்டன் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான். கதாநாயகியாக வளர்ந்து வரும் இளம் நடிகையான அனஸ்வரா ராஜன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கி உள்ளது.