Advertisement

சிறப்புச்செய்திகள்

அஜித் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அமரன் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! | ரோட்டர்டாம் பட விழாவை போல் மற்றொரு விழாவிற்கு சென்ற ‛ஏழு கடல் ஏழு மலை' | வைபவ், அதுல்யா ரவி நடிக்கும் ‛சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படப்பிடிப்பு நிறைவு! | ஒரே நிறுவனத்திற்கு அள்ளி தந்த சிவகார்த்திகேயன்! | 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் எப்போது? ராம் சரண் தகவல் | ஹீரோயினே வராமல் கிளைமாக்ஸ் காட்சி! என்ன ஆச்சு ரேஷ்மாவுக்கு? | மலையாளப் படங்களைத் திரையிட பிவிஆர் ஐநாக்ஸ் சம்மதம் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்கு முடக்கம் ; காரணம் இதுதான் | ஹிட் சீரியலிலிருந்து விலகிய ரிஹானா! அவரே சொன்ன காரணம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பயன்படுத்திய சேலைகளை விற்று உதவிய நவ்யா நாயர்

04 ஏப், 2024 - 11:56 IST
எழுத்தின் அளவு:
Navya-Nair-who-helped-by-selling-used-sarees

தமிழில் 'அழகிய தீயே' படம் மூலமாக அறிமுகமானவர் மலையாள நடிகை நவ்யா நாயர். தொடர்ந்து சேரனுடன் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாளத்தில் அதிக அளவில் படங்களின் நடித்து வந்தார். திருமணத்திற்கு பிறகு பத்து வருடங்கள் பெரிய அளவில் படங்களில் நடிக்காத அவர் தற்போது மீண்டும் மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருந்த நவ்யா நாயர் அதில், தான் ஓரளவு பயன்படுத்திய மற்றும் இன்னும் பயன்படுத்தப்படாத பல புடவைகளை நியாயமான விலைக்கு விற்கப் போவதாகவும் விரும்புபவர்கள் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். இப்படி ஒரு நடிகை தனது சேலைகளை விற்று பணம் பார்க்கிறாரே என்று பலரும் அவரை கிண்டலடிக்க துவங்கினர்.

ஆனால் அவர் இதில் வரும் தொகையை ஆதரவற்றோர் இல்லத்திற்கும் பலரின் மருத்துவ உதவிகளுக்கும் பள்ளிக் குழந்தைகளின் கல்வி செலவுக்கும் நன்கொடையாக கொடுத்து வருகிறார் என்கிற தகவல் தற்போது வெளியே தெரியவந்துள்ளது.

சமீபத்தில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று அவர்கள் அனைவரையும் பார்வையிட்டு அவர்களுடன் நேரம் செலவழித்துள்ளார் நவ்யா நாயர். இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தெரிந்ததும் அனைவருமே அவருடைய நல்ல உள்ளத்தை பாராட்டி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'கோட்' பட வாய்ப்பை கோட்டை விட்டேன் : வினீத் சீனிவாசன்'கோட்' பட வாய்ப்பை கோட்டை விட்டேன் ... ராஷ்மிகா பிறந்தநாளில் வெளியாகும் விஜய் தேவரகொண்டா படம் : திட்டமா... தற்செயலா...? ராஷ்மிகா பிறந்தநாளில் வெளியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in