Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒளிப்பதிவாளரை விவாகரத்து செய்த நடிகை

03 ஏப், 2024 - 12:45 IST
எழுத்தின் அளவு:
The-actress-who-divorced-the-cameraman

மலையாள சினிமாவின் முக்கியமான நடிகை மஞ்சு பிள்ளை. பழம்பெரும் நடிகர் எஸ்.பி.பிள்ளையின் மகள். குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சிநேகிதியே, மன்மதன் அன்பு உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் முகுந்தன் என்ற தொலைக்காட்சி நடிகரை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு 2000மாவது ஆண்டில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவை திருமணம் செய்து கொண்டார். சுஜித், கேரளா கபே, த்ரிஷ்யம், லூசிபர், மிஸ் இந்தியா உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் 'பாபநாசம்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். ஜேம்ஸ் அண்ட் அலைஸ் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கி உள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சு பிள்ளையும், சுஜித்தும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை இருவரும் மறுக்கவில்லை. இந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதை சுஜித் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நானும், மஞ்சு பிள்ளையும் பிரிந்து விட்டோம். விவாகரத்து பெற முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். தற்போது அது நிறைவடைந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து நாங்கள் நட்புடன் இருப்போம்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
24ம் தேதி அபர்ணா தாஸ் திருமணம் : மஞ்சும்மேல் பாயை மணக்கிறார்24ம் தேதி அபர்ணா தாஸ் திருமணம் : ... படம் புடிக்கலைனா செருப்பால அடிங்க : 'ஹாட்ஸ்பாட்' இயக்குனர் வேதனை படம் புடிக்கலைனா செருப்பால அடிங்க : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
04 ஏப், 2024 - 08:31 Report Abuse
Mani . V எவ்வளவு காலம்தான் ஒரே உணவகச் சாப்பாட்டை சாப்பிட முடியும். போரடித்துத்தானே போகும் - நான் சாப்பாட்டைச் சொன்னேன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in