Advertisement

சிறப்புச்செய்திகள்

ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வரும் அரண்மனை 4! | அஜித் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அமரன் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! | ரோட்டர்டாம் பட விழாவை போல் மற்றொரு விழாவிற்கு சென்ற ‛ஏழு கடல் ஏழு மலை' | வைபவ், அதுல்யா ரவி நடிக்கும் ‛சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படப்பிடிப்பு நிறைவு! | ஒரே நிறுவனத்திற்கு அள்ளி தந்த சிவகார்த்திகேயன்! | 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் எப்போது? ராம் சரண் தகவல் | ஹீரோயினே வராமல் கிளைமாக்ஸ் காட்சி! என்ன ஆச்சு ரேஷ்மாவுக்கு? | மலையாளப் படங்களைத் திரையிட பிவிஆர் ஐநாக்ஸ் சம்மதம் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் வங்கிக் கணக்கு முடக்கம் ; காரணம் இதுதான் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“உதிரிப்பூக்கள்” தந்து ரசிகர்கள் 'நெஞ்சத்தைக் கிள்ளிய' இயக்குநர் மகேந்திரன்

02 ஏப், 2024 - 13:36 IST
எழுத்தின் அளவு:
Director-Mahendran-Memorial-day

காலம் கடந்தும் பேசப்படும் காளி, வள்ளி, மங்கா, குமரன் என்ற கதாபாத்திரங்களைக் கொண்டு, “முள்ளும் மலரும்” என்ற காவிய கலைப் படைப்பை தந்து, தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற ஆற்றல் மிகு இயக்குநர் மகேந்திரனின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

* சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியை பிறப்பிடமாகக் கொண்ட இவர், பள்ளிப் படிப்பை தனது சொந்த ஊரிலும், இண்டர்மீடியட் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், பின் இளங்கலை பட்டப்படிப்பை காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்திலும் படித்து முடித்தார்.

* “இனமுழக்கம்” என்ற பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதும் பணி செய்து வந்த இவர், 1966ஆம் ஆண்டு வெளியான “நாம் மூவர்” என்ற திரைப்படத்திற்கு கதை எழுதும் வாய்ப்பு கிடைத்து, ஒரு தரமான கதாசிரியராக தமிழ் திரையுலகில் தடம் பதித்தார்.

* தொடர்ந்து வந்த “சபாஷ் தம்பி”, “பணக்காரப் பிள்ளை”, “நிறைகுடம்”, “திருடி”, “தங்கப்பதக்கம்”, “ஆடு புலி ஆட்டம்” போன்ற திரைப்படங்களுக்கும் கதை வசனம் எழுதி வெற்றியும் கண்டார்.

* சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத திரைக்காவியமான “முள்ளும் மலரும்” என்ற திரை ஓவியம் தந்து, படைப்பாளி என்ற பரிணாமம் பெற்றார் இயக்குநர் மகேந்திரன்.

* மனவலியைக் கூட தனது கேமராவின் ஒளி மொழியால் சொல்லத் தெரிந்த ஒளி ஓவியன் பாலுமகேந்திரா என்ற அபூர்வ திரைமேதையை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரியவரும் மகேந்திரனே.

* இலக்கியத்தின் மீது பேரார்வம் கொண்ட இவர், எழுத்தாளர் புதுமைப்பித்தனின் “சிற்றன்னை” என்ற குருநாவலுக்கு, தெளிவான திரைக்கதை எழுதி, தனது வலுவான படைப்பாற்றலைக் கொண்டு “உதிரிப்பூக்கள்” ஆக்கி உலக சினிமா தரத்தின் உச்சம் தொட்டார்.

* கன்னட நடிகை அஸ்வினி, நடிகர் சாருஹாசன், பேபி அஞ்சு, ஆகியோரை “உதிரிப்பூக்கள்” திரைப்படத்தின் மூலமும், நடிகை சுஹாசினியை “நெஞ்சத்தைக் கிள்ளாதே” திரைப்படத்தின் மூலமும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமையும் இவருக்குண்டு.

* அசோக்குமார் என்ற ஆகச்சிறந்த ஒளிப்பதிவாளரையும் தனது “உதிரிப்பூக்கள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து “பூட்டாத பூட்டுக்கள்”, “ஜானி”, “நெஞ்சத்தைக் கிள்ளாதே”, “நண்டு”, “மெட்டி”, “அழகிய கண்ணே”, “கை கொடுக்கும் கை” என இவர் இயக்கிய 12 திரைப்படங்களில் ஏறக்குறைய 9 திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரியும் வாய்ப்பினையும் அவருக்கு தந்து சிறப்பித்திருக்கின்றார் இயக்குநர் மகேந்திரன்.

* கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என பயணித்து வந்த இயக்குநர் மகேந்திரன், “காமராஜ்”, “தெறி”, “நிமிர்”, “மிஸ்டர் சந்திரமௌலி”, “சீதக்காதி”, “பேட்ட”, “பூமராங்” என ஒருசில திரைப்படங்களில் நடித்து தன்னை ஒரு நடிகராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.

* சிறந்த திரைப்படங்களுக்கான ஃபிலிம் ஃபேர் விருதினை இவரது “முள்ளும் மலரும்”, “உதிரிப்பூக்கள்” வென்றெடுக்க, இவருடைய “நெஞ்சத்தைக் கிள்ளாதே” திரைப்படம் மட்டும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை வென்றது.

* யதார்த்த பாணி சினிமாக்களை தந்து, கலையுலகம் என்ற பெட்டகத்தில் நிலையான இடம் பிடித்து நீடித்த புகழோடு விளங்கும் இயக்குநர் மகேந்திரனின் கலைப்படைப்புகள் அனைத்தும் என்றென்றும் அவர் புகழ் பாடும் என கூறி, அவருடைய நினைவு நாளில் அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை பகிர்ந்து கொள்வதில் நெஞ்சம் நிறைவு கொள்வோம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இணையத்தில் கசிந்த 'ஆடுஜீவிதம்' : போலீசில் புகார்இணையத்தில் கசிந்த 'ஆடுஜீவிதம்' : ... சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் பிறமொழி முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in