'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் விஜயா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் அனிலா ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், '33 வருடங்களாக திரைத்துறையில் இருந்தும் சிறகடிக்க ஆசை தொடர் எனக்கு பிரபலத்தை கொடுத்துள்ளது. பலர் நான் வெளியே போகும்போதெல்லாம் என்னுடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் சீரியலில் ஏன் மீனாவை கொடுமை படுத்துகிறீர்கள். நேரில் பார்த்தால் நான் ஆசிட் அடித்துவிடுவேன் என்றெல்லாம் மிரட்டுகிறார்கள். ஒரு விதத்தில் சிரிப்பாக இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது' என்று கூறியுள்ளார்.