ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானாலும் பின்னர் கவர்ச்சி நடிகை ஆனவர் சோனா. 'கனிமொழி' என்ற படத்தை தயாரித்து பெரும் இழப்பை சந்தித்தார். சொந்தமாக செயற்கை நகை வியாபாரம் செய்தார். எதுவும் சரியாக அமையவில்லை.
இந்த நிலையில் அவர் தனது வாழ்க்கை கதையை 'ஸ்மோக்' என்ற பெயரில் தயாரித்து, இயக்கி வருகிறார். இது 'ஷார்ட் பிளிக்ஸ்' என்ற ஓடிடி தளத்தில் இரண்டு சீசன்களாக வெளியாகிறது. முதல் சீசனுக்கான படப்பிடிப்பு முடிந்திருக்கிறது.
இந்த தொடரில் 5 வயது சோனாவாக ஆதினி என்ற சிறுமியும், 15 வயது சோனாவாக ஜனனியும், 30 வயது சோனாவாக ஆஸ்தா அபயும் நடிக்கிறார்கள். இப்போதுள்ள சோனாவா நடிக்க சரியான நடிகைகள் கிடைக்காததால் தானே நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: புகை படர்ந்த கனவுகள் நிறைந்த வாழ்க்கையில், என்னவென்றே தெரியாத இடங்களுக்கோ அல்லது சூழல்களுக்கோ வாழ்க்கை எங்கே என்னை அழைத்து செல்லும் நிலையில் சரியாக என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. என்னுடைய கதையை சொல்வதால், கேட்கப்பட்ட கேள்விகள் அல்லது மறந்துபோன கேள்விகள், ஒளிந்துள்ள உண்மைகள் அல்லது சொல்லப்படாத உண்மைகள் குறித்து இதை இயக்கியுள்ளதுடன் அதில் அனைத்திலும் ஒரு பாகமாகவும் இருந்தேன். என் வாழ்க்கைக்குள் வந்து என்னை பாருங்கள். எனது கேரக்டரில் நான் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று எல்லோரும் சொன்னதால் நானே நடிக்கிறேன். இரண்டாவது சீசனில் நடிப்பில் எனது பங்களிப்பு அதிகமாக இருக்கும்” என்கிறார், சோனா.




