மோசமான தோல்வியை சந்தித்த 'ஏக் தின்' | 'கருப்பு' ரிலீஸ் சிக்கலா? முன்பதிவு டல்லா? | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படத்தில் பூஜா ஹெக்டே! | 'ஜனநாயகன்' பட ஓடிடி உரிமையை கைப்பற்ற போட்டி போடும் நிறுவனங்கள்! | நெல்சனால் தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2' படம்! | ஆகஸ்ட் மாதத்தை குறிவைத்த சூரியின் 'மண்டாடி' | அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பைத் தொடரும் விஜய் அரசு | நீதி கிடைக்க வேண்டும்; இசையமைப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஸ்வாகதா பதிவு | 'கருப்பு' வியாபாரம், கசிந்த தகவல்… | சட்டசபையில் சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி |

இந்திய சினிமாவில் முதல் புகழ் பெற்ற நடிகை என்றால் அது தேவிகா ராணிதான். 1908ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் பிறந்த இவர் பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை ராணுவ அதிகாரி. பெரிய கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர். அவரது முன்னோர்கள் ஆங்கில அரசில் பெரிய பதவியில் இருந்தவர்கள். கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் உறவினர்.
லண்டனில் படித்த தேவிகா ராணி. பள்ளி படிப்பு முடிந்ததும் நடிப்பு, நடனம் கற்றார். இவரது கணவர் சினிமா தயாரிப்பாளர் என்பதால் அவருடன் இவரும் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டார். சில குறும்படங்களை இயக்கினார். ஆங்கிலம், ஹிந்தியில் 'கர்மா' என்ற முதல் பேசும்படத்தை தயாரித்தார். இந்த படத்தில் அவர் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் லிப்லாக் முத்தக்காட்சி இடம்பெற்று அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய சினிமாவில் முதல் லிப் லாக் முத்தக்காட்சி இது.
அதன்பிறகு ஏராளமான படங்களில் நடித்த தேவிகா ராணி சொந்தமாக ஸ்டூடியோ கட்டினார், தியேட்டர் கட்டினார், சினிமாவின் அத்தனை பணியிலும் ஈடுபட்ட தேவிகா ராணி இந்திய சினிமாவின் முதல் பெண் ஆளுமை என்று போற்றப்படுகிறார். இந்திய சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருதை முதலில் பெற்றவரும் இவர்தான். இன்று தேவிகா ராணியின் 116வது பிறந்த நாள்.