'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ்ப் படங்களுக்கான சோதனை இந்த வருடத்தின் மூன்றாவது மாத முடிவிலும் தொடர்கிறது. நேற்று மார்ச் 29ம் தேதி ஏழு நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின. அந்தப் படங்களில் ஒரு சில படங்களுக்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்துள்ளன. ஆனாலும், அப்படங்களைப் பார்க்க மக்கள் தியேட்டர்களுக்கு ஆர்வத்துடன் வரவில்லை என தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம், நேற்று வெளியான ஹாலிவுட் படமான ''காட்சில்லா x காங் - த நியூ எம்பயர்' படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதாம். குறிப்பாக குழந்தைகள், பெண்கள் குடும்பத்தினருடன் இந்தப் படத்தை வந்து பார்ப்பதாகச் சொல்கிறார்கள். நேற்று வெளியான ஏழு தமிழ்ப் படங்களை விடவும் இந்தப் படம் அதிக தியேட்டர்களில் வெளியாகி உள்ளதாம்.
ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 3டி, ஐமேக்ஸ் வடிவிலும் இப்படம் வெளியாகி உள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இந்தப் படம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெறும் என்கிறார்கள்.