கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான மலையாள படம் 'வாலாட்டி'. தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. இந்த படம் நாய்களின் காதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த காதல் கதையுடன் சிறுவர்களுக்கும், நாய்களுக்குமான உறவையும் படம் பேசியது.
முதன் முறையாக ஹாலிவுட் படங்கள் போன்று நாயை பேச வைத்து இந்த படத்தை உருவாக்கி இருந்தனர். அனிமேஷன் காட்சிகளை பயன்படுத்தாமல் நிஜ நாய்களை நடிக்க வைத்தனர். இதில் 100 நாய்கள் வரை நடித்திருந்தது. தேவன் இயக்கி இருந்தார். 4 வருடங்கள் உழைத்து இந்த படத்தை உருவாக்கி இருந்தார்கள்.
தற்போது இந்த படம் ரஷ்ய மொழியில் மாற்றம் செய்ப்பட்டு அங்குள்ள தியேட்டர்களில் திரையிடுகிறது. இதற்கான உரிமத்தை ரஷ்யாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான கெப்பல்லா பெற்றிருக்கிறது. இதனை தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்ட முதல் மலையாள படம் என்ற பெருமையை வாலாட்டி பெறுகிறது.