பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' |

தமிழில் மீரா மகதி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டபுள் டக்கர்'. இப்படத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்தியாவில் முதல் முறையாக அனிமேஷன் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற படமாக உருவாகியுள்ளது. ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி சற்று கவனத்தை ஈர்த்தது. முழுக்க முழுக்க குழந்தைகளை குறிவைத்து உருவாக்கியுள்ள இப்படத்தை வருகின்ற ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.