தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மிருணாள் தாக்கூர் என்றால் யார் என்று தான் தென்னிந்திய ரசிகர்கள் கேட்டிருப்பார்கள். ஆனால் அழகிய காதல் கவிதையாக வெளியான சீதாராமம் படத்திற்கு பிறகு ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாக பதிந்து விட்டார் மிருணாள் தாக்கூர். அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நானி நடிப்பில் வெளியான ஹாய் நன்னா திரைப்படமும் அவரது சிறப்பான நடிப்பை பறைசாற்றும் விதமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள பேமிலி ஸ்டார் திரைப்படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது.
கீதா கோவிந்தம் படம் மூலம் விஜய் தேவரகொண்டாவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்த இயக்குனர் பரசுராம் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் வெற்றிக்காக ஐதராபாத்தில் பல்காம்பேட் எல்லம்மா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்துள்ளார் மிருணாள் தாக்கூர். இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.




