சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

தென்னிந்திய சினிமா மற்றும் சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் 1017 உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி மற்றும் ராஜேந்திரன், சற்குணம் உள்ளிட்டோர் போட்டியிட்டார்கள். தேர்தலுக்கு பிறகு உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், நடிகர் ராதாரவி 662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரன் 349 வாக்குகளும், சற்குணம் 36 வாக்குகளும் பெற்றுள்ளார்கள். இதன் மூலம் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் ராதாரவி தலைவராகி இருக்கிறார். மேலும் நடிகர் ராதாரவி மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த போதும், அதை எல்லாம் மீறி அவர் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.