Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, பேஷன் ஷோ எதுக்கு? - பார்த்திபன்

07 டிச, 2023 - 15:27 IST
எழுத்தின் அளவு:
Why-fashion-show-when-you-cant-afford-to-buy-ration-rice?---Parthiban

மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை ஓய்ந்த பின்னர் கூட இன்னும் பல இடங்களில் வீடுகளை சூழ்ந்த வெள்ளநீர் வடியவில்லை. இதனால் பெரும்பாலான மக்கள் உணவு, குடிநீர் இன்றியும் தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய பார்த்திபன். இந்த நிலை பற்றி வெளியிட்ட பதிவு:

நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். நான் வட்டம், மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன். ஏன் இந்த அவல நிலை? சென்னை மட்டுமல்ல, சமீபத்தில் கண்டுங்காணா குண்டுங்குழி நிறைந்த மும்பாபையிலும்(பணக்கார முதலைகள் சாலையை கடக்கும் மாநிலம்)இதே நிலை.

தனி மனிதனாகவும் , தமிழ்நாடாகவும், வல்லரசு(?) நாடாகவும், இந்தியா தன்னிறைவடையாத (தண்ணீரும் வடியாத) நாடு! தண்ணீர் இருக்கிறதா? என ஆராய, சந்திரனுக்கு சந்திரயானும், செவ்வாய்க்கு செங்கல்வராயனும் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்? ஒரு ப்ளாஸ்டிக் படகு எடுத்துக் கொண்டு (வேளச்)ஏரிக்குள் கட்டப்பட்டிருக்கும் lake view apartments-க்கு மிக அருகாமையில் நிறைமாத நீரை பார்வையிடலாமே?

அதிவேக புல்லட் ரயில், அதிநவீன தொழில் நுட்ப முன்னேற்றம் இப்படிப்பட்ட நாளைய இந்தியப் பெருமையில் எருமை urine போக! அடிப்படை தேவைகள், வேலை வாய்ப்புகள், சாலை வசதிகள், மாசற்ற காற்று, இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளும் இடரற்ற சக்தி, ஏழை மக்களும் எதற்கும் கையேந்தாமல் கவுரவமாக வாழும் உயர்நிலை இவைகளை வழங்க, வழங்கும் வரி பணத்தையெல்லாம் பயன்படுத்திவிட்டு பின்பு வுடலாம் ராக்கெட்டு!

ஒரு சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 உயிர்களை மீட்ட போது எப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம். ஆனால் இந்தியா என்ற சுரங்கத்திற்குள் இருந்து இத்தனை கோடி உயிர்களை மீட்க முடியாத இழிநிலையில் சுதந்திர தின மூவர்ண பல்லி மிட்டாய்களும், குடியரசுதின பைக் சாகச கொண்டாட்ட செலவினங்கள் எதற்கு?

ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, பேஷன் ஷோ எதுக்கு? இப்படி நூறாயிரம் கேள்விகளில் தூக்கம் தொலைந்தது.

நானோ, kpy பாலாவோ, அறந்தாங்கி நிஷாவோ இன்னும் சிலரின் உண(ர்)வு பொட்டலங்கள் செய்திக்கு செய்தி சேர்க்குமே தவிர, அடுத்த வேளை அடுப்புக்கு நெருப்பும், அதில் பொங்க அரிசியும் சேர்க்காது.

சமீபத்தில் கீர்த்தனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்… இன்னும் 50 ஆண்டுகளில் என் காலத்திற்கு பிறகும் இந்தியாவிலேயே பறக்கும் கார்கள்(இப்போது மிதக்கும் கார்கள்) போன்ற அதியற்புத வளர்ச்சியை காணலாமென. அதை விட… இந்திய வரைபடத்தில், வறுமை கோடும் அதனடியில் சில எலும்புக் கூடும் வாழும் நிலை மாற வேண்டும்.

(நான் குற்றஞ்சுமத்துவது அரசியல்வாதிகளை அல்ல. பொருளாதாரம் சார்ந்த அரசியலை. அதை சீர் செய்ய தொலைநோக்குள்ள தன்னலமற்றவர்கள் தகுதி பெற வேண்டும்!)

இது ஒரு தனிமனித சிந்தனை எனவே தவறு இருக்கலாம். இருப்பின் பொருட்படுத்தாதீர்கள்.

இன்றும் இயன்றதைச் செய்து இடர் குறைப்போம்!

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பார்த்திபனின் இந்த பதிவு கவனம் ஈர்த்துள்ளது.

Advertisement
கருத்துகள் (51) கருத்தைப் பதிவு செய்ய
அரசாங்கம் எங்கே ? : அதிதி பாலன் கேள்விஅரசாங்கம் எங்கே ? : அதிதி பாலன் கேள்வி நடிகர் ரஹ்மானின் மகள் திருமணத்திற்காக ஒன்றுகூடிய 80ஸ் நட்சத்திரங்கள் நடிகர் ரஹ்மானின் மகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (51)

Vijay D Ratnam - Chennai,இந்தியா
09 டிச, 2023 - 20:13 Report Abuse
Vijay D Ratnam 'ரேஷன் அரிசிக்கே வக்கில்லாத போது பேஷன் ஷோ எதுக்கு' அடடா அடடா எப்பேர்ப்பட்ட எதுகை மோனை டயலாக். தான் பெரிய அறிவாளி புதுமை விரும்பி என்று காட்டிக்கொள்வதில் பார்த்திபனுக்கு ஒரு அலாதி ஆனந்தம். பேஷன் ஷோவுக்கு வந்தே ஆவணும்னு எவனாவது இவரு கையை பிடித்து இழுத்தானா. பல் இருக்குறவன் பகோடா சாப்பிடுகிறான் உனக்கு இஷ்டமில்லை என்றால் நீ போகாதே ராஜா. சோத்துக்கே வழியில்லாத ஊரில் எதுக்கு சந்திரமண்டலத்துக்கு ராக்கெட் உடுறீங்க என்று சில தினங்களுக்கு முன் சீமான் வாய்ச்சவடால் அடித்தார் அது மாதிரி இருக்கு.
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
12 டிச, 2023 - 10:07Report Abuse
angbu ganeshஇவை பிக் bos...
Rate this:
09 டிச, 2023 - 07:41 Report Abuse
பாலா நடிகர் விஷாலுக்கு இருக்குற தைரியம் கூட இவனுக்கு இல்லை.
Rate this:
Nesan - KARAIKUDI,இந்தியா
08 டிச, 2023 - 11:27 Report Abuse
Nesan இவன் ஒரு அரை கிறுக்கன்
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
12 டிச, 2023 - 10:08Report Abuse
angbu ganeshஇல்ல முழுசு இவர் முன்னாள் மனைவி சீதா ஒரு பேட்டிலை சொல்லி இருக்காங்க...
Rate this:
lana -  ( Posted via: Dinamalar Android App )
08 டிச, 2023 - 11:16 Report Abuse
lana அதான் அவரே சொல்லி விட்டார் ல வட்டம் மாவட்டம் னு குறுகிய அரசியல் இல்லை ன்னு. அவிங்க ல சொன்னா குறுக்கு எலும்பு உடைந்து போகும். எல்லா வகையிலும் மேல ஒருத்தன் இருக்கார் ல மோடி தான் காரணம். உங்கள் எஜமான் விசுவாசம் போதும். தமிழை வெறும் வயிறு வளர்க்கும் பொருள் ஆக பார்க்கும் பொருளாதார புள்ளிகள் இந்த பார்த்தீனியம்
Rate this:
ganesha - tamilnadu,இந்தியா
08 டிச, 2023 - 11:10 Report Abuse
ganesha இவன் ஒரு கிறுக்கன் 😂 விடியா அரசை கேக்க துப்பில்லை 😂 தமிழ் ல நாலு வார்த்தை பேச தெரிஞ்சுட்டா, என்னவேணும் னாலும் பேசலாமா 😂 இவன் கோமாளி ங்கறதை இப்போ நன்னா PROVE பண்ணிட்டான் 😂🤣😂
Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Na Na
  • நா நா
  • நடிகர் : சசிகுமார் ,
  • இயக்குனர் :NV நிர்மல்குமார்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in